71வது தேசிய திரைப்பட விருதுகள்: முழு விவரம்!
Seithipunal Tamil August 02, 2025 05:48 AM

71வது தேசிய திரைப்பட விருதுகள் 2023ம் ஆண்டுக்கான தேர்வுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுகள் பெறும் படங்களும் கலைஞர்களும் பின்வருமாறு:

சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடித்த ‘பார்க்கிங்’ படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதையும் வசனங்களும் எழுதி இயக்கியவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவருக்கே சிறந்த திரைக்கதை, வசனத்திற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

‘பார்க்கிங்’ படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

ஒளிப்பதிவுப் பிரிவில், ‘லிட்டில் விங்ஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர்கள் சரவணமருது சவுந்தர பாண்டியன் மற்றும் மீனாக்சி சோமனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

‘டைம்லெஸ் தமிழ்நாடு’ என்ற ஆவணப்படம் சிறந்த கலை மற்றும் கலாச்சார படத்திற்கான விருது பெற்றுள்ளது.

‘வாத்தி’ திரைப்பட பாடலுக்காக இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலையாள திரைப்படமான ‘உள்ளொழுக்கு’யில் நடித்த ஊர்வசி சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார்.

ஷாரூக் கான், அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படத்தில் அவரது நடிப்புக்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்காக இயக்குனர் சுதீப்தோ சென் சிறந்த இயக்குநராக தெரிவிக்கப்பட்டுள்ளார்.

‘12th ஃபெயில்’ படத்தில் நடித்த விக்ராந்த் மாசி சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.