பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 20-வது தவணை இன்று விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு தகுதி உள்ள விவசாயிக்கும் 2000 ரூபாய் பணம் நேரடியாக வங்கிகளில் வரவு வைக்கப்படும்.
இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பிஎம் கிசான் நிதியை விடுவிப்பார். சுமார் 9.7 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் கேஒய்சி சரிபார்ப்பை செய்து முடிப்பது அவசியம்.
பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மூன்று முறை பணம் டெபாசிட் செய்யப்படும்.