திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரத்தில் ஜெய் சரண்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். இந்நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் மருத்துவ அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை வேலைகளையும் பகுதி நேர வேலையாக செய்து வருகிறார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்யா மாவட்டம் கங்காவரத்தை சேர்ந்த ரவிக்குமார்(55) என்பவர் ரஷ்யாவில் படிக்கும் தனது மகளுக்கான கல்வி கட்டணத்தை செலுத்துவதற்காக ஜெய்சரணுக்கு ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சத்தி 60 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் ஜெய் சரண் அந்த பணத்தை அனுப்பவில்லை. இதனை ரவிக்குமார் பணத்தை திருப்பி கேட்டபோது ஜெய்சரண் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன ரவிக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறை என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ஜெய்சரண் ரஷ்யாவில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதே போன்று ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவதாக கூறி ரூ. 5 கோடியை 90 லட்சம் வரை ஏமாற்றியது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.