ரூ.4.5 கோடி வங்கி மோசடி – அமீரகத்தில் பிடிபட்ட இந்தியர் சிபிஐயிடம் ஒப்படைப்பு!
Seithipunal Tamil August 02, 2025 10:48 PM

பொதுத் மற்றும் தனியார் வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் வீட்டு கடன்கள் பெற்றுக் கொண்டு ரூ.4.5 கோடி மோசடி செய்த உதித்குல்லார், அபுதாபியில் கைது செய்யப்பட்டு டெல்லி சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 மோசடி எப்படி நடந்தது?உதித்குல்லார் மற்றும் அவரது கூட்டாளிகள், பொது/தனியார் வங்கிகளில் பொய்யான சொத்து ஆவணங்கள் மூலம் வீட்டு கடன்கள் பெற்றனர்.டெல்லி போலீசாரின் விசாரணையில், சச்சின் மிட்டல், விஷால் ஓபராய், ஹிமான்ஷூ, ரஸ்கோத்ரா, ஷோபித்அகர்வால் போன்றோர் தொடர்புடையவர்களாகக் கண்டறியப்பட்டனர்.

இதையடுத்து, அவர்கள் மீது FIR பதிவு செய்து , குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது ,தப்பி ஓடியதால் சிபிஐ விசாரணையில் ஒப்படைக்கப்பட்டது .CBI, இண்டர்போல் மூலம் சிவப்பு நோட்டீஸ் விடுத்தது தேடப்பட்டு வந்தநிலையில் உதித்குல்லார், அபுதாபியில் தலைமறைவாக இருந்தது கண்டறியப்பட்டது,

அதனை தொடர்ந்து UAE NCP (National Crime Prosecution) அதிகாரிகள்,இந்திய அதிகாரிகளுடன் இணைந்து அபுதாபியில் கைது செய்தனர்.இதையடுத்து UAE நீதிமன்றம் நாடு கடத்தல் உத்தரவு பிறப்பித்தது

அதனை தொடர்ந்து டெல்லி போலீசார் அபுதாபி சென்று அவரை ஏற்று,இந்திராகாந்தி விமான நிலையம் வழியாக இந்தியா கொண்டு வந்தனர்,

பின்னர் CBI அதிகாரிகள் உடனடியாக கைது செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்."இந்த நடவடிக்கையில் ஒத்துழைத்த அபுதாபி மற்றும் இண்டர்போல் அதிகாரிகளுக்கு,டெல்லி போலீசார் நன்றியை தெரிவித்துள்ளனர்."

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.