Manimegalai: `அது முடிஞ்சு போன சேப்டர்' - தொகுப்பாளர் மணிமேகலையின் பளிச் பதில்கள்
Vikatan August 02, 2025 07:48 PM

சென்ற ஆண்டு இந்த நேரமெல்லாம் சின்னத்திரை ஏரியாவை ஆக்கிரமித்திருந்த ஒரு செய்தி, தொகுப்பாளர் மணிமேகலை விவகாரம் தான்.

'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தன் வேலையைச் சரியாகச் செய்ய விடாமல் இடையில் புகுந்து தொல்லை கொடுத்தார் போட்டியாளராக வந்து பிரியங்கா' என்பதுதான் மணிமேகலையின் குற்றச்சாட்டு. இன்னும் ஒரு படி மேலே போய், 'என் சுயமரியாதைக்கே இழுக்கு வந்ததால் நிகழ்ச்சியில் தொடர முடியவில்லை' எனச் சொல்லி வெளியேறினார்.

இந்த விவகாரத்தில் மணிமேகலை - பிரியங்கா என, இருவருக்கும் ஆதரவு எதிர்ப்பு என டெலி செலிபிரிட்டிகள் பலரும் பேசினர்.

தொகுப்பாளர் மணிமேகலை `உள்மனசு சொல்லுச்சு’

பிறகு ஜீ தமிழ் பக்கம் வந்த மணிமேகலை, அங்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சமீபத்தில் அந்த ஷோ முடிவடைந்த நிலையில், மணிமேகலையிடம் பேசினோம்.

``ஜீ தமிழ்ல இதுக்கு முன்னாடி நிகழ்ச்சி பண்ணியதே கிடையாது. அதனால ஆரம்பத்துல சின்னதா யோசிச்சேன். ஆனா ஒரு பெரிய சண்டை சச்சரவுக்குப் பிறகு ஒரு வாய்ப்பு வருதுன்னா நிச்சயம் அது நமக்கு நல்லதாத்தான் இருக்கும்னு உள்மனசு சொல்லுச்சு.

நான் எப்பவுமே என் உள் மனசு சொல்றதை அப்படியே கேப்பேன். அதனால பண்ணலாம்னு முடிவெடுத்தேன். ஆறு மாசம் போயிருக்கும் டிஜேடி அனுபவம். ரொம்பவே நல்லா இருந்தது ஒர்க் அனுபவம். என் வேலையை சுதந்திரமா முழு ஈடுபாட்டுடன் செய்தேன்.

`சினிமாவுல பார்க்கவே முடியலையே

நல்ல ரெஸ்பான்ஸ். ஷோ போயிட்டிருக்கிற போதே வேலைக்கான அங்கீகாரம் கிடைச்ச மாதிரி சில அமைப்புகள்கிட்ட இருந்து எனக்கு சிறந்த தொகுப்பாளர் விருது கிடைச்சது.

இப்ப நிகழ்ச்சி முடிஞ்சிட்டாலும் அடுத்த ஷோ குறித்த பேச்சுகள் போயிட்டிருக்கு. அடுத்த சில தினங்கள் அது பத்தின முறையான அறிவிப்பு வரும்'' என்கிறார்.

தொகுப்பாளர் மணிமேகலை

`டிவியில வந்தா அடுத்து சினிமாதான். ஆனா உங்களை சினிமாவுல பார்க்கவே முடியலையே ஏன்' என்றால்,

'பதினாறு வருஷமாச்சு. இந்த வேலைக்கு வந்து. ரொம்பவே பிடிச்ச வேலை. அதனால இதை மட்டும் எவ்வளவு காலம் முடியுதோ அதுவரை செய்துட்டுப் போவோமே. எதுக்கு இன்ட்ரஸ்ட் இல்லாத ஒரு இடத்துக்கு பஸ் ஏறணும்?' என எதிர்கேள்வி கேட்கிறார்.

`சரி, கடந்தாண்டு சம்பவத்துக்குப் பிறகு பிரியங்கா கூட பேசுகிற சூழல் எதுவும் அமைந்ததா' என்ற கேள்வியையும் கேட்டோம்.

``அதுக்கான அவசியம் ஏற்படலை. என்னைப் பொறுத்தவரை அது முடிஞ்சு போன சேப்டர்” என்றபடி பேச்சையும் முடித்துக் கொண்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.