திருக்குறள் பயிற்சி வகுப்பு..பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
Seithipunal Tamil August 02, 2025 05:48 AM

தேனி மாவட்டம்,தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024-ஆம் நாளன்றுகன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாநிகழ்ச்சியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும்மிக்க ஆசிரியர்கள்,பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி
வழங்கி மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள்நடத்தப்படும் எனவும், ‘திருக்குறள் திருப்பணிகள்’ தொடர்ந்து நடைபெற திட்டம்வகுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி. தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில”திருக்குறள் திருப்பணிகள்” திட்டத்தின் கீழ் திருக்குறள் பயிற்சி வகுப்புகள்தேனி, பெரியகுளம், கம்பம் என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொருபகுதிக்கும் ஒரு குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குழுக்களின் மூலம் தேனி-அல்லிநகரம் நகராட்சியில் நாடார் சரசுவதிபெண்கள் மேனிலைப்பள்ளியிலும், பெரியகுளம் நகராட்சியில் எட்வர்டு நினைவுநடுநிலைப்பள்ளியிலும், கம்பம் நகராட்சியில் ஸ்ரீமுக்திவிநாயகர்நடுநிலைப்பள்ளியிலும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.இந்தப் பயிற்சி வகுப்புகள் பயிற்சிக் கட்டணம் ஏதுமின்றி ஆண்டுக்கு 30வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நிறைவு நாளில் பயிற்சிபெற்றவர்களுக்குத் தமிழக அரசின் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி வகுப்பு நாளை (02.08.2025) முதல் ஒவ்வொரு சனிக்கிழமைபிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வது தொடர்பான கூடுதல்விவரங்களுக்கு tamilvalar.thn@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோஅல்லது 04546-251030 என்ற எண்ணிலோ தொடர்பு
கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.