தமிழகத்தில் இன்று காலை முதல் சிலிண்டர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் எல்.பி.ஜி. சிலிண்டர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ஏற்றும் லாரிகளுக்கு ஒவ்வொரு பிளாண்ட்டுகளிலும் ஒப்பந்தப்படி போதிய லோடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.ஜி. சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். இதனால் எல்.பி.ஜி. வினியோகம் தடையின்றி சீராக தொடரும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?