நாடு முழுவதும் நாளை விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் தவணைத் தொகை விடுவிக்க்ப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 முதல் தவணைத்தொகையை பிரதமர் மோடி விடுவிக்கிறார். இந்த திட்டப்படி, சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் 3 தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 19 தவணைகளாக 3.69 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகை நாளை நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு விடுவிக்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?