காப்பாற்ற யாருமே வரல... ஓடும் ரயிலில் தவறி விழுந்து இளம்பெண் பலி!
Dinamaalai July 31, 2025 05:48 PM

 கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வசித்து வருபவர்  ராஜேஷ். இவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ரோகிணி . இவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.  இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. ராஜேஷின் தந்தை சென்னையில் உள்ளார். அவரை பார்க்க கணவன்-மனைவி இருவரும் சென்னைக்கு புறப்பட்டனர் குழந்தையை உறவினர்களிடம் விட்டு விட்டு இருவரும் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, சேலம்வழியாக சென்னை செல்லும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர்.

 ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்து நின்றவுடன் சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டது.  அப்போது ரோகிணி கழிவறைக்கு சென்றார். கழிவறைக்கு வெளியே உள்ள வாஷ்பேஷினில் முகத்தை கழுவிக்கொண்டிருந்த அவர் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவே இல்லை.  நீண்ட நேரம் ஆகியும் வராததால் ராஜேஷ் அவரை தேடிச்சென்றார். அருகில் உள்ள இருக்கைகளுக்கு சென்று தேடிப்பார்த்தும் அவரை பார்க்க முடியவில்லை. ஆனால் ரயில்  ரயில் காட்பாடியை நெருங்கிவிட்டது. சந்தேகம் அடைந்த ராஜேஷ் உடனே காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரோகிணியை தேடினர்.  

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில்  கிடந்தது தெரியவந்தது.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அங்கு சென்று பிணமாக கிடந்த பெண் அணிந்த உடை மற்றும் அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தினர். அதில் சடலமாக  கிடந்தது  ரோகிணி என்பதும் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து கிடந்ததும் தெரியவந்தது. ஆனால் தவறி விழுந்த தண்டவாளத்தில் இருந்து எதிர்திசையில் ரயில்கள் வரும் தண்டவாளத்தில் ரோகிணி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில்  ஒரு பெண் உயிருக்கு போராடிய நிலையில் எழுந்த மறு பகுதிக்கு சிரமப்பட்டு நடந்து வந்ததாகவும் அதன்பின் முடியாமல் அங்கேயே விழுந்து விட்டதாகவும் கூறினர்.  ரயிலில் இருந்து தவறி விழுந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு சென்று விடலாம் என கருதி நடந்து சென்றிருப்பதும்,  காப்பாற்ற யாரும் வராததால் உயிரிழந்ததும்  தெரியவந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.