இளம் ஐடி ஊழியர் படுகொலை.! சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ தம்பதியினர்.! தமிழகத்தையே அதிர வைத்த கொடூரம்!!
Tamilspark Tamil July 30, 2025 06:48 AM

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரசேகர் மற்றும் தமிழ்செல்வி தம்பதியினர். இவர்களது மகன் கவின் செல்வகணேஷ். 26 வயது நிறைந்த அவர் சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கவின் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் வசித்து வந்த சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி தம்பதியினரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியன் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 24 வயது நிறைந்த சுர்ஜித் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் அண்மையில் கவின் விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். அப்பொழுது அவர் தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். அங்கு கவினை சுர்ஜித் அழைத்து பேசிய நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை சாராமரியாக வெட்டியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் துடித்துடித்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் கவினின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின் சுர்ஜித்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்... பெண் ஜிம் பயிற்சியாளர் படுகொலை... காதலன் வெறி செயல்.!!

வேறு சமூகத்தை சேர்ந்தவர் தனது அக்காவை காதலித்ததால் வெட்டிகொன்ற இந்த ஆணவக்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கவினின் உடலை வாங்க அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறுத்து சாலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எஸ்.ஐ தம்பதியான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: விபத்தில் உயிரிழந்த கண்டக்டர்.! விசாரணையில் அம்பலமான மனைவியின் மாஸ்டர் பிளான்.! திடுக் சம்பவம்!!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.