நாளை தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்!
Dinamaalai July 30, 2025 07:48 AM


 
 தமிழக வெற்றிக் கழகத்தின்  உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி நாளை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை ஜூலை 30 ம் தேதி  காலை 11 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வெளியிடுகிறார்.  


இது குறித்து  தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியை மேற்கொள்ள, உறுப்பினர் சேர்க்கை அணியை நம் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, கடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இரண்டு கோடி உறுப்பினர்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கும் வகையில், நாளை (30.07.2025) காலை 11 மணிக்கு  உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அறிமுக நிகழ்வு, நடைபெற உள்ளது’.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கக்கூடிய 69000க்கும்   அதிகமான வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் நேரில் சென்றும் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளை மேற்கொள்வார்கள்” என கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.