நோட் பண்ணிக்கோங்க. உங்க ஆகஸ்ட் மாத பண பரிவர்த்தனைகளை இப்பவே திட்டமிட்டுக்கோங்க. ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 13 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை சுதந்திர தினம், ரக்க்ஷா பந்தன், ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட எத்தனை விடுமுறை நாட்கள் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ரிசர்வ் வங்கி மற்றும் மாநில அரசுகள் இணைந்து, வங்கி விடுமுறைகளின் பட்டியலைத் தயாரிக்கின்றன. இதில் தேசிய பண்டிகைகள், முக்கிய ஆன்மீக நிகழ்வுகள், மாநில அளவிலான பண்டிகைகள் மற்றும் வாராந்திர விடுமுறை நாட்களும் கணக்கில் கொள்ளப்படும். அதே போல் மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளிலும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல் :
ஆகஸ்ட் 3 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 8 - வெள்ளிக்கிழமை : டெண்டோங் லோ ரம் ஃபாத் பண்டிகை காரணமாக சிக்கிம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் விடுமுறை
ஆகஸ்ட் 9 - ரக்க்ஷாபந்தன் 2 வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 10- ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 13: புதன்கிழமை : தேசபக்தி திவாஸ் மணிப்பூரில் வங்கிகள் விடுமுறை
ஆகஸ்ட் 15: வெள்ளிக்கிழமை : சுதந்திர தினம் : தேசிய விடுமுறை.
ஆகஸ்ட் 16: ஜென்மாஷ்டமி காரணமாக நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களின் தனியார் மற்றும் அரசு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 16: சனிக்கிழமை : ஜென்மாஷ்டமி : பார்சி புத்தாண்டு குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் விடுமுறை
ஆகஸ்ட் 17 : ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 23 :4 வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 24 : ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 26: செவ்வாய்க்கிழமை: விநாயகர் சதுர்த்தி கர்நாடகா மற்றும் கேரளாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 27: புதன்கிழமை : விநாயகர் சதுர்த்தி காரணமாக ஆந்திரா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் வங்கிகள் விடுமுறை
ஆகஸ்ட் 31 : ஞாயிற்றுக்கிழமை
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?