நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் நேற்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தனர்.
இன்று அந்தச் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பேசிவருகிறார்.
"நேற்று நடந்த ஆபரேஷன் மஹாதேவில், பஹால்காம் தாக்குதலில் சம்பந்தப்பட்ட மூன்று தீவிரவாதிகள் தான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில், அவர்களின் மதம் என்ன என்று கேட்டு கொல்லப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை நான் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
ஆபரேஷன் மஹாதேவ்மேலும், ``இந்திய ராணுவம், சி.ஆர்.பி.எஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் இணைந்து நடத்திய ஆபரேஷன் மஹாதேவில், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கும் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆபரேஷன் மஹாதேவில், சுலேமான் என்ற பைசல், ஆப்கான் மற்றும் ஜிப்ரான் ஆகிய மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளார்.
சுலேமான் லஷ்கர்-இ-தொய்பாவின் ஏ-பிரிவு தளபதியாகவும், ஆப்கான் லஷ்கர்-இ-தொய்பாவின் ஏ-பிரிவு தீவிரவாதியாகவும், ஜிப்ரானும் ஏ-தர தீவிரவாதியாகவும் இருந்தவர்கள் ஆவார்கள்.
பைசரன் பள்ளத்தாக்கில் நமது குடிமக்களைக் கொன்ற மூன்று தீவிரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு வழங்கியவர்கள், உதவியர்வர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளின் உடல்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு வரப்பட்டவுடன், எங்களால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களால் அடையாளம் காணப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நான் சந்தித்தேன். திருமணமான 6 நாட்களுக்குப் பிறகு, விதவையான ஒரு பெண் என் முன் நிற்பதைக் கண்டேன் - அந்தக் காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
அடையாளம் காணப்பட்டது எப்படி?தீவிரவாதிகளை அனுப்பியவர்களை மோடி ஜி செயலிழக்க செய்தார். இன்று நமது பாதுகாப்புப் படையினர் அப்பாவி மக்களை கொலை செய்தவர்களை கொன்றுள்ளனர் என்று இன்று அனைத்து குடும்பங்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன்.
நேற்று இறந்த பயங்கரவாதிகளின் உடல்கள் ஸ்ரீநகரை கொண்டு வந்தப்போது, அவர்கள் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய மூன்று பேர் என அடையாளம் காணப்பட்டனர்.
அமித் ஷாதீவிரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதோட்டாக்கள் குறித்து FSL அறிக்கை ஏற்கனவே தயாராக இருந்தது... நேற்று, மூன்று பயங்கரவாதிகளின் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு, செய்யப்பட்ட FSL அறிக்கைகளுடன் அது பொருத்தின... நேற்று சண்டிகரில் மேலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் பிறகு, இந்த மூவரும் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
நேற்று அவர்கள் (காங்கிரஸ்) பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள், அதற்கு யார் பொறுப்பு என்று எங்களிடம் கேட்டார்கள். நிச்சயமாக, நாங்கள் ஆட்சியில் இருப்பதால் அது எங்கள் பொறுப்பு.
நேற்று, முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்கள் கேள்வி எழுப்பினார் - பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன? பாகிஸ்தானைக் காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் இதைச் சொல்லும்போது, 'அவர்கள் தவறே இல்லை' என்று அவர்களுக்கு சர்ட்டிஃபிகேட்டை வழங்குகிறார் என்று அர்த்தம்.
ஆபரேஷன் சிந்தூர் தீவிரவாதிகளை அனுப்பியவர்களைக் கொன்றது... ஆபரேஷன் மஹாதேவ் தாக்குதல் நடத்தியவர்களைக் கொன்றது... இந்த செய்தியைக் கேட்ட பிறகு, ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சிகளிலும் மகிழ்ச்சியின் அலை பரவும் என்று நினைத்தேன். ஆனால் 'அவர்களின் முகங்கள் கரி பூசப்பட்டதுப்போல ஆகிவிட்டது'... இது என்ன வகையான அரசியல்?” என்றார்.
மேலும் தொடர்ந்தவர், ``ஏப்ரல் 30 அன்று, பாதுகாப்பு கவுன்சில் (CCS) கூட்டம் நடந்தது. அதில் பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் மே 7-ம் தேதி அதிகாலை 1:04 மணி முதல் 1:24 மணி வரை நடைபெற்றது. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது தீவிரவாத இடங்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் எந்த பாகிஸ்தான் பொதுமக்களும் கொல்லப்படவில்லை.
நமது பாதுகாப்பு படை ஆபரேஷன் சிந்தூரின் போது, 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைக் கொன்று குவித்தது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு, நமது பாதுகாப்பு படைகள் இயக்குநரகம், பாகிஸ்தான் DGMO-விடம், தற்காப்பு உரிமையின் படி, உங்கள் நிலத்தில் இருந்த தீவிரவாத அமைப்புகளை இந்தியா தாக்கியது என்று தெரிவித்தது.
மன்மோகன் சிங் அரசாங்கத்தில் நடந்ததுப்போல, இப்போது இருக்க முடியாது. தீவிரவாதிகள் வந்து, எங்களைக் கொன்று செல்ல, எங்களால் அமைதியாக அமர்ந்திருக்க முடியாது." என்றார்.
தொடர்ந்து, ``நேற்று, அவர்கள் (காங்கிரஸ்) ஏன் போர் இல்லை என்று கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தனர்... இன்று மாறாக பேசுகின்றனர்.
இன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பது ஜவஹர்லால் நேருவினால் மட்டுமே... 1960-ல், இவர்கள் சிந்து நதி நீரில் 80% பாகிஸ்தானுக்கு கொடுத்தனர்... 1971-ம் ஆண்டு, சிம்லா ஒப்பந்தத்தின் போது, காங்கிரஸ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பற்றி மறந்துவிட்டனர். அப்போது அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்திருந்தால், இப்போது அங்குள்ள முகாம்களில் தாக்குதல்களை நடத்த வேண்டியிருந்திருக்காது.” என்றார்,
நேற்று வரை, பஹல்காம் தாக்குதல்காரர்கள் எங்கே சென்றார்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
உங்கள் ஆட்சிக் காலத்தில் மறைந்திருந்தவர்கள் இன்று தேடப்பட்டு கொல்லப்படுகின்றனர். நமது படைகளால் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்... மே 7-ம் தேதி, அதிகாலை 1.26 மணிக்கு எங்கள் பணி முடிந்தது. இது மன்மோகன் சிங் அரசு இல்லை; இது நரேந்திர மோடி அரசு.
நாங்கள் அமைதியாக உட்கார்ந்து ஆவணங்களை அனுப்ப மாட்டோம். மே 9-ம் தேதி, பாகிஸ்தானின் 11 விமானத் தளங்கள் அழிக்கப்பட்டன. எட்டு விமானத் தளங்களின் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. அது பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை அதிர வைத்தது.
இன்று, சீனா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளது. ஆனால், இந்தியா இல்லை. மோடி ஜி இந்தியாவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்.
இதற்கு நேருவின் நிலைப்பாடு தான் காரணம்.
நமது வீரர்கள் டோக்லாமில் சீன வீரர்களை எதிர்கொண்டு போரிட்டுக் கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி சீன தூதருடன் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். சீனாவின் மீதான இந்த அன்பு ஜவஹர்லால் நேரு, சோனியா காந்தி, ராகுல் காந்தி என மூன்று தலைமுறைகளாக இருந்து வருகிறது.
பாகிஸ்தான் என்பது காங்கிரஸின் தவறு. காங்கிரஸ் பிரிவினையை ஏற்காமல் இருந்திருந்தால், இன்று பாகிஸ்தான் இருந்திருக்காது.
இந்திய தாக்குதலில் பாகிஸ்தானின் ஆறு ரேடார் அமைப்புகள் அழிக்கப்பட்டன.
அவர்கள் நமது குடியிருப்பு பகுதிகளைத் தாக்கினார்கள். ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை. நாம் அவர்களின் விமானத் தளங்களை மட்டுமே தாக்கி, அவர்களின் தாக்குதல் திறன்களை அழித்தோம்.
நமது ஆயுதப்படைகள் பாதிக்கப்படவில்லை. அவர்களின் தாக்குதல் திறன்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானுக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. மே 10-ம் தேதி, பாகிஸ்தான் DGMO நமது DGMO-வை அழைத்தார். அன்று மாலை 5 மணிக்கு நாங்கள் மோதலை நிறுத்தினோம்.
2002-ல், அடல் ஜியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பயங்கரவாத தடுப்பு சட்டம், 2002-ஐ (POTA) கொண்டு வந்தது. அப்போது POTA-வை எதிர்த்தவர்கள் யார்? அது காங்கிரஸ் கட்சி. 2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, சோனியா காந்தி-மன்மோகன் சிங் அரசு POTA சட்டத்தை ரத்து செய்தது... காங்கிரஸ் POTA-வை யாருடைய நன்மைக்காக ரத்து செய்தது?" எனக் கேள்வி எழுப்பினார்.