திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாகுடியில் நேற்று நள்ளிரவு திடீரென்று இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி விரைந்துச் சென்ற போலீசார் மோதலை தடுக்க முற்பட்டனர். அப்போது, மோதலில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் தனது தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதில் அந்த இளைஞர் காயமடைந்தார். இதையடுத்து, அந்த நபர் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதலையொட்டி பாப்பாகுடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.