Fridge Food Storage: சமைத்த உணவை இதற்கு மேல் ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.. உடல்நலத்தை கெடுக்கும்..!
TV9 Tamil News July 31, 2025 12:48 AM

இன்றைய நவீன வாழ்க்கையில் பெரும்பாலான தினமும் ப்ரஷாக உணவை சமைப்பது என்பது கடினமான விஷயமாகும். இதன் காரணமாக, மக்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் அதிக அளவு உணவை தயாரித்து, பின்னர் பயன்படுத்த ஃப்ரிட்ஜில் (Fridge) வைக்கின்றனர். ஆனால் பல சுகாதார நிபுணர்கள் சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம் (Leftover Food) என்று அறிவுறுத்துகிறார்கள். அந்தவகையில், ஃப்ரிட்ஜில் உணவை நீண்ட நேரம் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன, அதை எவ்வளவு நேரம் உள்ளே வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

எத்தனை நாள் வரை மீதமான உணவுகளை வைத்து சாப்பிடலாம்..?

சமைத்து மீதமுள்ள உணவுகளை பிரிட்ஜில் 3 முதல் 4 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். ஆனால், அதன்பிறகு, ஃபுட் பாய்சன் ஏற்படும் அபாயம் அதிகம். 4 நாட்களுக்குள் மீதமுள்ள உணவை உங்களால் சாப்பிட முடியவில்லை என்றா, அவற்றை ஃப்ரிட்ஜில் இருக்கும் பீரிசர் பாக்ஸில் வைக்கலாம். உறைந்த உணவு நீண்ட நேரம் பாதுகாப்பாக இருக்கும். இதை, ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

ALSO READ: கால்சியம் தொடர்பாக சொல்லப்படும் கட்டுக்கதைகள்.. உண்மை உடைக்கும் மருத்துவர்கள்!

3 முதல் 4 நாட்களுக்கு பிறகு, பாக்டீரியா என்று அழைக்கப்படும் கிருமிகள், ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் உணவுகளின் மீது வளர தொடங்கலாம். இந்த வளர்ச்சி ஃபுட் பாய்சன் மற்றும் உணவு மூலம் பரவும் நோயை உண்டாக்கலாம். நோய் என்றும் அழைக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. பாக்டீரியாக்கள் பொதுவாக உணவின் சுவை, வாசனை அல்லது தோற்றத்தை மாற்றாது. எனவே ஒரு உணவு சாப்பிடுவது ஆபத்தானதா என்பதை நீங்கள் சொல்ல முடியாது. உணவின் பாதுகாப்பு குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அதை வெளியே எறிவது நல்லது.

ஃப்ரிட்ஜில் உணவை எப்போது வைப்பது சிறந்தது…?

நீங்கள் சமைத்து சாப்பிட்ட பிறகு, மீதமுள்ளவற்றை ஃப்ரிட்ஜில் வைப்பதே சிறந்தது. நீங்கள் சாப்பிட நினைக்கும்போது, உணவை வெளியே வைத்து அதை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது நல்லது. பொதுவாகவே, உணவை பாதுகாக்க வேண்டுமென்றால், உணவை மீண்டும் மீண்டும் சூடாக்குவதும், குளிர்ச்சியாக வைத்திருப்பதும் ஆகும்.

சமைக்கப்படாத சிக்கன், மட்டன், மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டை போன்ற சீக்கிரம் அழுகும் உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜில் சில நாட்கள் முதல் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். பிரட், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை நீண்ட நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

ALSO READ: காலையில் எழுந்ததும் முதலில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன? ஆயுர்வேத மருத்துவர்கள் அறிவுரை

காய்கறிகளை ஃப்ரிட்ஜில் 3-4 நாட்கள் சேமிக்கலாம். பழங்களையும் ஒரு வாரம் வைத்திருக்கலாம். இது தவிர, முட்டை, பீன்ஸ் மற்றும் இறைச்சியை இரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும். ஆனால் சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் ஐந்து முதல் ஆறு மணி நேரத்திற்கு மேல் வைக்கக்கூடாது. இதை தவிர, முடிந்தவரை ப்ரஷாக சமைத்த உணவை உண்ணுவது பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.