ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பெஞ்ச் மாவட்டத்தில் தேபாஷிஷ் பத்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சோனாலி தலில் (23) என்ற மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சோனாலி தன்னுடைய மகனுடன் தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படும் நிலையில் கடந்த 12-ம் தேதி தன்னுடைய மகள் சோனாலி மற்றும் பேரனை அழைத்துக் கொண்டு அந்தப் பெண்ணின் தாயார் சுமதி தயால் மருமகன் வீட்டிற்கு சமாதானம் பேசுவதற்காக சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் ஒரு வாரம் தங்கி இருந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு நேரத்தில் தன்னுடைய மாமியார் மற்றும் மனைவி தூங்கும் போது தேபாசிஸ் பத்ரா அவர்கள் இருவரையும் கல்லால் அடித்து கொலை செய்தார். பின்னர் தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் தன் மனைவி மற்றும் மாமியாரின் பிணத்தை புதைத்து விட்டார்.
யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆதாரத்தை அழிக்க பின்னர் பிணங்களின் மேல் வாழை மரத்தை நட்டுள்ளார். அதற்குப் பிறகு தேபாசிஷ் பத்ரா மற்றும் அவரது மகன் இருவரும் மிகுந்த கவலை இருந்த நிலையில் இதனை கவனித்த கிராமத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்ததோடு வீட்டின் பின்புறம் புதிதாக வாழை மரங்கள் நட்டது பற்றியும் கூறியுள்ளனர்.
பெண்கள் இருவரும் காணாமல் போனதாக கிராமவாசிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அழுகிய நிலையில் இருந்த பெண்களின் சடலங்களை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..