சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு இரண்டாவது சீசன் தொடங்கும் தேதி தெரிய வந்துள்ளது.
நாளை நிகழ்ச்சியின் புரொமோ வெளியாகவிருக்கிறதாம்.
விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி வெளியாகி சில மாதங்கள் ஆகி விட்ட சூழலில், அதற்குப் போட்டியாகப் பார்க்கப்படும் டாப் குக்கு டூப் குக்கு' வெளியாகும் தேதி தற்போது தெரிய வந்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்க இருக்கிறது நிகழ்ச்சி.
இது தொடர்பாக நிகழ்ச்சி தொடர்புடைய ஏரியாவில் விசாரித்தோம்.
'குக்கு வித் கோமாளி'யில் இந்த சீசனில் கூடுதலாக ஒரு நடுவர் வந்ததால் இங்கயும் நிகழ்ச்சியைப் பிரமாண்டமாப் பண்ணலாம்கிற ஒரு ஐடியாவுல இருக்காங்க.
யூ டியூபர் ஜி.பி.முத்து உள்ளிட்ட சிலர் வரும் சில புரொமோக்கள் நீங்க ஏற்கனவே பாத்திருக்கலாம். புதுமுகங்கள் சிலரும் இறக்கப்படுறாங்க.
அந்த வகையில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மூலம் ரொம்பவே பிரபலமடைந்த கமலேஷ் டூப் குக்காக களம் இறங்கறார்னு தெரிய வருது.
மத்த போட்டியாளர்கள் குறித்த விபரங்கலாஈ ரொம்பவே சஸ்பெண்ஸா வச்சிருக்காங்க' என்கிறார்கள் இவர்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR