கருப்பு படத்திற்கு இது பெரிய மைனஸா? வலைப்பேச்சு பிஸ்மி சொல்றத கேளுங்க
CineReporters Tamil August 01, 2025 12:48 AM

karuppu

சூர்யாவின் கருப்பு திரைப்படம் தான் அடுத்த அவருடைய நடிப்பில் வெளியாக கூடிய திரைப்படம். ஆனால் அந்தப் படத்தின் இசை ரீதியாக பல விமர்சனங்கள் வருகின்றது. அந்த அளவுக்கு இசை நன்றாக இல்லை என கூறி வருகிறார்கள். இதைப் பற்றி வளைப்பேச்சு பிஸ்மி அவருடைய கருத்துக்களை கூறியிருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.

அவருக்கு என ஒரு மார்க்கெட் இப்போது இருக்கிறது. கருப்பு படத்தில் ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது. திடீரென அந்த பாடலைக் கேட்டதும் எனக்கு ஜெயிலர் படத்தின் பாடல் நினைவுக்கு வந்தது. அதனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் சாய் அபயங்கரும் இன்றைய இசை அமைப்பாளர்களை போல் காதுகளை காயப்படுத்துகிற இசையை கொடுப்பது போல இவரும் அப்படித்தான் கொடுப்பார் என தெரிகிறது.

நீங்கள் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருக்க வேண்டும் என்றால் இதுவரை கொடுத்த இசையை போல் இல்லாமல் சற்று மாறுதலான இசையை கொடுத்தால் தான் அந்த இடத்திற்கு வர முடியும் .உதாரணத்திற்கு ஏ ஆர் ரகுமானை எடுத்துக் கொள்ளலாம் .ஒரு காலத்தில் இளையராஜாவின் பாடல்கள் கோலோச்சி கொண்டிருந்தபோது ரோஜா படத்தின் மூலமாக ரகுமான் அறிமுகம் ஆகிறார் .

sai

அதில் சின்ன சின்ன ஆசை பாடல் மட்டும் தான் வெளியானது. அது என்ன படம் யார் நடித்த படம் யார் இயக்குனர் என எதுவுமே தெரியாது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்த பாடலைக் கேட்டதும் சட்டென நின்று கேட்க தோன்றியது .அந்த மாதிரி ஒரு தனித்தன்மையோடு யாரு முதல் படத்திற்கு இசையை கொடுக்கிறார்களோ அந்த மாதிரியான உச்சத்தை அடைய முடியும். அது சாய அபயங்கரின் இசையில் மிஸ் ஆனதாக எனக்குத் தெரிகிறது என பிஸ்மி கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.