ஆகஸ்ட் 9ம் தேதி வரை தரிசிக்க அனுமதியளிக்கப் பட்டுள்ள நிலையில், ஜம்முவில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக குவிந்து வருகின்றனர். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே பனி லிங்கம் உருவாகும் என்பதால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கம் உருவாகி உள்ள நிலையில் பக்தர்கள் குவிகின்றனர். அமர்நாத் பனி லிங்கம், ஜம்மு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது. பஹல்காமில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் இந்த குகைக் கோவில் அமைந்துள்ளது.
அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை வருடத்தின் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும். அதன்படி வழக்கமாக பனிலிங்க தரிசனத்திற்கு ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜம்முவில் குவிந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த வருடம் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்பதிவு அடிப்படையில் யாத்திரையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?