மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே அவரிடம் போனில் பேசியிருந்தேன். எந்த முடிவும் எடுக்காதீர்கள் என்று கூறியிருந்தேன். இருந்த போதும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.
அவருடைய சொந்த பிரச்சனையை ஏதும் காரணமா என்று தெரியவில்லை. என்னிடம் சொல்லி இருந்தால் பிரதமர் மோடியை சந்திக்க நானே ஏற்பாடு செய்திருப்பேன். இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை, அது தவறான கருத்து. முதலமைச்சரை எதற்காக சந்தித்தார் என்று தெரியவில்லை தொகுதி பிரச்சனைக்காக கூட சந்தித்திருக்கலாம் என்று கூறினார்.