“10 வயசு கூட இருக்காது”… அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த குழந்தைகள்… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த அண்ணாமலை… அமைச்சர் அன்பில் மகேஷ் மீது பாய்ச்சல்…!!!
SeithiSolai Tamil August 04, 2025 04:48 AM

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இந்த சம்பவம் குறித்து என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் – பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில்;

புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி, நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகப் பள்ளிகள் ஏற்கனவே, வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல், சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவலநிலையில் உள்ளபோது, பத்து வயதுக்கும் குறைவான தொடக்கப்பள்ளி மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருப்பது, பள்ளிக்கல்வித்துறை எத்தனை சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது.

இன்னும் ரசிகர் மன்ற மனப்பான்மையில் இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், கடந்த நான்கு ஆண்டுகளாக கல்வித்துறைக்குச் செய்தது, முதலமைச்சருடன் இணைந்து, விளம்பர நாடகங்களில் நடித்தது மட்டும்தான். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது சட்டப்படி குற்றம் என்பதாவது தெரியுமா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களே? என்று கூறியிருந்தார்.

“>

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.