அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் சில காய்கறிகள் முளைகட்டிய நிலையில் இருக்கும். அதனை சிலர் சமைத்து சாப்பிடுவார்கள். அதில் சில காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. அவை என்னவென்று இந்தப் பதிவில் காண்போம்.
வெங்காயம்
சமையலுக்கு மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம். இந்த வெங்காயத்தை முளைகட்டினால் சாப்பிடக்கூடாது என்பது சிலருக்குத் தெரியும். சிலருக்கு தெரியாமல் இதுவரைக்கும் சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், முளைகட்டிய வெங்காயத்தை சாப்பிட கூடாது என்பதற்கு காரணம் என்னவென்றால், முளைகட்டிய வெங்காயம் அதிக அளவு ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்கிறது.
அதிலும் குறிப்பாக n-புரோபில் டைசல்பைடு உற்பத்தி அதிகளவில் உள்ளது. இது இரத்த சிவப்பணுக்களை சேதப்படுத்துகிறது மற்றும் ஹீமோலிடிக் இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது.
பூண்டு
முளைகட்டிய பூண்டை உட்கொள்வதைத் தவிர்க்கவும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். முளைகட்டிய பூண்டில் அதிக அளவு சல்பர் சேர்மங்கள் உள்ளன. இது செரிமான பிரச்சனைகளையும், இரத்த சிவப்பணுக்களுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதத்தையும் ஏற்படுத்தும்.
உருளைக்கிழங்கு
அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கு சில நாட்களில் முளைகட்டி இருக்கும். அதனை பலரும் சமைத்து சாப்பிடும் வழக்கம் வைத்துள்ளனர். அப்படி சாப்பிடுவதை முதலில் தவிர்க்க வேண்டும். முளைகட்டிய உருளைக்கிழங்கை உட்கொள்வது குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் உள்ளிட்ட சோலனைன் விஷத்தை ஏற்படுத்தும்.