தினமும் சாப்பாட்டிற்கு என்ன பொரியல் செய்வது என்று குழப்பமாகவே இருக்கும். அப்படி உள்ளவர்களுக்கு இந்த அவரைக்காயை வைத்து பருப்பு உசிலி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:- அவரைக்காய், துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், கடுகு, எண்ணெய், உப்பு.
செய்முறை: முதலில் அவரைக்காயைப் பொடியாக நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து, வேக விட்டு தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து, சிறிது உப்பு சேர்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு போட்டு தாளித்து, அரைத்த பருப்பை சேர்த்து நன்கு உதிரி உதிரியாக வரும் வரை கிளறி, வேக வைத்த அவரைக்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான அவரைக்காய் பருப்பு உசிலி தயார்.