நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்
Top Tamil News August 04, 2025 01:48 PM

பொதுவாக  நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவும் 

1.சிலர் தினமும் மூன்று வேளை நான் வெஜிடேரியன் சாப்பிடுவார்கள் .இப்படி அசைவப் பொருட்களை
சாப்பிடுவதை குறைக்க வேண்டும் . 
2.எதை சாப்பிட்டாலும் அளவாய் சாப்பிடுவதே ஆரோக்கியமானது.மேலும் நோயின்றி வாழ உதவும் 
3.எந்நேரமும் சாதம் அதிகம் சாப்பிடாமல் தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ண
வேண்டும் . காய்கறிகளை பாதி வேக வைத்து சாப்பிடுவது சால சிறந்தது 
4. எப்போதும் காபி டீ குடிக்காமல் எலுமிச்சை சாறு, பழச்சாறு, தண்ணீர்,
கிரீன் டீ போன்றவற்றை அதிகம் அருந்தினால் ஆயுள் கூடும் 
5.சிலர் அதிகம் கொழுப்பு உள்ள துரித உணவுகளை சாப்பிடுவர் .இப்படி கொழுப்பு நிரம்பிய உணவுகளை ஒதுக்கி வையுங்கள்
6.சிலர் உணவில் அதிகம் உப்பு சேர்ப்பது வழக்கம் .உணவில் உப்பு அதிகம் சேர்த்து கொள்ளாதீர்கள் .
7.சிலர் அவசர அவசரமாக சாப்பிடுவர் .இப்படி உண்ணாமல் ,உண்பதை நன்றாக மென்று உண்ண வேண்டும் 
8. நிறைய தண்ணீர் குடித்தால் உடலில் நோய்கள் அண்டாது ,
உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேற்ற தண்ணீர் உதவும்.
உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்காதீர்கள்.
மிதமான சூடுள்ள தண்ணீரை குடியுங்கள் .
9.எலும்புகள் வலிமையாக இருக்க காலை வெயிலிலும் கொஞ்ச
நேரம் உலவுங்கள் வைட்டமின் டி கிடைக்கும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.