சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் வழியில் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தையும், அடிமைத்தனத்தையும் வீழ்த்துவோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் செய்திக்குறிப்பில், "‘ஓடாநிலையில் கோட்டைக்கட்டி ஆண்டு தன் வீரத்தாலும் - தியாகத்தாலும் கோடானு கோடி மக்கள் மனதில் நிலைத்திருக்கும் மாவீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான ஆக.3-ஆம் தேதி மண் மற்றும் மக்களின் மானம் காக்க போரிட்டு உயிா்நீத்த அவரது நினைவைப் போற்றுவோம்.
அடிமைத்தனமே தோல்விக்கான தொடக்கப்புள்ளி என ஆதிக்கத்துக்கு அடிபணிய மறுத்து அந்நிய படையை விரட்டியடித்த தன்னிகரில்லா வீரத்துக்குச் சொந்தக்காரா்.
அவா் வழியில் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தையும், அடிமைத்தனத்தையும் வீழ்த்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.