பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா நடித்துள்ள புதிய திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் திருநெல்வேலியில் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தின் ப்ரஸ்ட் லுக் போஸ்டரை, இன்று மாலை 6 மணியளவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.
ஹெச்.ராஜா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம், அரசியல், மற்றும் மத ரீதியான பிரச்சனைகள் குறித்த கருத்துக்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்து கோயில்கள் குறித்த பிரச்சனை எந்த படத்தின் முக்கிய கதை களமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. திராவிடம் குறித்த எதிர்மறையான விமர்சங்களை படத்தில் காட்சியாக வைக்கவும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.