ஆகஸ்ட் 5ல் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
Dinamaalai August 04, 2025 05:48 AM

ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளன கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26,000 வழங்க வேண்டும். ஒப்பந்தமுறையை ஒழிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு அறிவிப்பை உடனடியாக செயல்படுத்தி நிலுவையுடன் வழங்க வேண்டும்.

22 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உற்பத்தி முதல் விற்பனை வரை திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருவிகளின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும்.

ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். 8 மணி நேரத்துக்கு மேலான வேலை நேரத்துக்கு மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும், ஆகிய 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.