கடவுளிடம் போகப் போறேன் எனக் கூறி திடீரென இரண்டு குழந்தைகளின் தாய், தனது வீட்டின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹிமாயத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் அருண்குமார் ஜெயின். தொழிலதிபரான இவரிது மனைவி பூஜா ஜெயின். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில், இவர்கள் குடும்பத்துடன் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அருண்குமார் ஜெயின் அலுவலகத்திற்கு சென்ற நிலையில் வீட்டில் பூஜா ஜெயின் அவரது பிள்ளைகள் மற்றும் வேலைக்கார பெண் இருந்தனர். இந்நிலையில் நீண்ட நேரம் தன்னுடைய அறையில் தனியாக இருந்த பூஜா, மதியம் 2 மணியளவில் அறையில் இருந்து வெளியே வந்தப்படியே, தான் கடவுளிடம் செல்வதாக கூறியபடி 5வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஹைதர் குடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பூஜாவைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பூஜாவின் அறையை சோதனை செய்தனர். அப்போது அவரது அறையில் கடிதம் ஒன்று இருந்தது. அதில் நாம் தொடர்ந்து கடவுளை பற்றி தியானித்து அவருக்கு நம்மை அர்ப்பணித்தால் நாம் கடவுளிடம் நெருக்கமாகி சொர்க்கத்தை அடைவோம் என்ற சமண குருக்களின் பொன்மொழியை எழுதி வைத்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?