வங்கமொழியை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை வங்கதேச மொழி எனக் கூறியுள்ளது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே நேர்ந்த அவமானம் என மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கு நேரடி அவமானம் எனக் கூறியதுடன் இது தற்செயலான பிழை அல்ல, மாறாக பன்முகத்தன்மையை சிறுமைப்படுத்தும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் “ ”வங்காள மொழியை ‘வங்கதேசத்தின் மொழி’ என டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
நம் தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே நேரடியான அவமானம். இது தற்செயல் பிழையோ, தவறோ அல்ல, பன்முகத்தன்மையை தொடர்ந்து குறை மதிப்பீடு செய்யும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையைக் காட்டுகிறது. ஹிந்தி அல்லாத மொழிகள் மீதான இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு மேற்குவங்க மக்களுக்கும், அம்மொழிக்கும் மம்தா பானர்ஜி கேடயமாக நிற்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?