பொதுத் தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் நிலவி வரும் அச்சத்தை போக்கும் வகையில் பரிக்சா பே சர்ச்சா ( Pariksha Pe Charcha), அதாவது தமிழில் தேர்வுகள் மீதான பயம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த பரிக்சா பே சர்ச்சா நிகழ்வில் பங்கேற்க இதுவரை 3.53 கோடி பேர் பதிவு செய்துள்ள நிலையில், இது ஒரு கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வித்துறையின் மூலம் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், அனைத்து மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடுவார். குறித்த நிகழ்ச்சியில் ஒரு மாநிலத்தில் இருந்து 36 மாணவர்கள் என்ற அடிப்படையில் கலந்து கொள்வர்.
இந்த பரிக்சா பே சர்ச்சா நிகழ்ச்சி மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க இதுவரை Mygov தளத்தில் 3.53 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்திருக்கின்றனர். இதை கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதோடு, கின்னஸ் சாதனை சான்றிதழையும் அவர் பகிர்ந்துள்ளார்.