ஒரு ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1 மாதம் முழுவதும் இலவசம்... பி.எஸ்.என்.எல். சுதந்திர தின அதிரடி ஆஃபர்
Dinamaalai August 05, 2025 09:48 AM

பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் சுதந்திர தின அதிரடி ஆஃபராக 1 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1 மாதம் இலவச சலுகைகளை வழங்குகிறது.

இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுதந்திர தினத் திட்டம்” என்ற பெயரில், பி.எஸ்.என்.எல். மாதம் முழுவதும் வெறும் 1 ரூபாயில் வரம்பற்ற சேவைகளை வழங்க தீர்மானித்துள்ளது. இந்த சேவையானது ஆகஸ்ட் 1 முதல் 30 வரை மட்டுமே கிடைக்கும். இது இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்திய சலுகையாகும்.

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் 1 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு தினமும் 4ஜி வேகத்துடன் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை இலவசமாக பெறலாம். அத்துடன் புதிதாக ஒரு சிம் கார்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஆஃபர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மட்டுமே உள்ளது.

இந்த சலுகையை பெற விரும்பும் பொதுமக்கள், அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது முகாம் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இலவச சிம்கார்டு பெற பொதுமக்கள் ஆதார் அட்டை நகல் கொண்டு செல்ல வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். தொலை தொடர்புத்துறை அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.