பத்திரம் மக்களே... இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... நாளை ரெட் அலெர்ட்!
Dinamaalai August 05, 2025 05:48 AM

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால்  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும்  மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. 

இது குறித்து  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று ஆகஸ்ட் 4ம் தேதி  நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஆகஸ்ட் 5ம் தேதி  நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்  மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.