Coolie: `கூலி டைம் டிராவல் படமா?' - லோகேஷ் கனகராஜ் கொடுத்த சப்ரைஸ் பதில் என்ன?
Vikatan August 06, 2025 02:48 AM

'கூலி' படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், படத்தின் இறுதிகட்டப் பணிகளிலும் ப்ரோமோஷன் பணிகளிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

பேட்டிகள், இசை வெளியீட்டு விழா, செய்தியாளர் சந்திப்பு என லோகேஷ் பேசும் பல விஷயங்களும் இணையத்தில் கன்டென்ட்களாக வைரலாகி வருகின்றன.

கடந்த 2-ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருந்தது.

Coolie - Rajini Speech

டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, திரைப்படம் குறித்த பல்வேறு ஊகங்கள் இருந்து வருகின்றன.

அதில், 'கூலி' ஒரு சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம், இப்படம் டைம் டிராவலை மையப்படுத்தியது என சமூக வலைதளப் பக்கங்களில் பேசி வருகின்றனர்.

இதற்கு லோகேஷ் கனகராஜ் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 'கூலி' திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்வில் பதிலளித்திருக்கிறார்.

நானும் ஆவலாக இருக்கிறேன்

லோகேஷ் கனகராஜ் பேசும்போது, "நான் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் வரும் பதிவுகளை வாசிப்பேன்.

மக்கள் சொல்லும் விஷயங்கள் என்னையும் சர்ப்ரைஸ் செய்தன. நானும் இப்போதுதான் சத்யராஜ் சாரிடம், 'அனைவரும் இதை சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம், டைம் டிராவல் திரைப்படம் எனச் சொல்கிறார்கள்' எனப் பேசிக் கொண்டிருந்தேன்.

Coolie - Lokesh Kanagaraj

ஆனால், படத்தைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்படுவதைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன்," என்றவர், "நான் கமல் சாருடனும் ரஜினி சாருடனும் வேலை பார்த்துவிட்டேன்.

இருவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இருவருமே லெஜெண்ட்தான். இரண்டு பேருமே ஓஜிதான்! சொல்லப்போனால், இருவருமே என்னுடைய கண்கள்," எனப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.