பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால் (E20) 4 சக்கர வாகனங்களில் மைலேஜ் பெரிதும் குறைவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெளிவான மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், அறிவியல் ரீதியாக இதற்கேற்கென்ற ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், மைலேஜ் குறைபாடு அல்லது ஆபத்தானதோ அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, E10க்காக வடிவமைக்கப்பட்டு E20க்காக மாற்றம் செய்யப்பட்ட 4 சக்கர வாகனங்களில் 1%-2% மட்டுமே மைலேஜ் குறைவடையக்கூடும். மற்ற வாகனங்களில் 3%-6% வரை மாறக்கூடும். எனினும், இன்ஜினை சரியாக டியூன் செய்தால் மற்றும் தரமான உதிரிப்பாகங்களை பயன்படுத்தினால் இந்தக் குறைபாடுகளை தவிர்க்கலாம். இதை வாகன உற்பத்தியாளர்களும் ஏற்கின்றனர்.
“>
மேலும், பழைய வாகனங்களில் ரப்பர் பாகங்கள், காஸ்கெட் போன்றவை 20,000 கிலோமீட்டர் ஓட்டிய பிறகு மாற வேண்டியிருக்கும். இது மிகப்பெரிய செலவல்ல என்றும், சாதாரண சர்வீஸ்களில் இதை செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, E20 காரணமாக மைலேஜ் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்பது பொய்யான தகவலாகும். இது குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.