Singapenne: ஆனந்தியை சிங்கப்பெண்ணாக்கிய வார்டன்... மித்ராவின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணமா?
CineReporters Tamil August 06, 2025 05:48 AM

சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என தெரியாததால் குடும்பத்தினர் அனைவருமே தவியாய் தவித்து வருகின்றனர். ஊர்க்காரர்கள் முன்னாடியும் அவமானப் பட்டாச்சு. அடுத்து என்ன நடக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்து வருகின்றனர். ஆனந்தியோ அவங்க அப்பா அம்மாவை இங்கேயே இருங்க. நான் ஊருக்குப் போய் இதுக்கு யாரு காரணம்னு கண்டுபிடிச்சி நான் களங்கமானவள் அல்லன்னு உங்க முன்னாடி நிரூபிக்கிறேன் என்கிறாள் ஆனந்தி.

அதற்குள் சுயம்பு மித்ராவிடம் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தைச் சொல்லப் போறேன். என்னன்னு கேட்டபோது ஆனந்தியை எந்தளவு ஊருக்கு முன்னாடி அவமானப்படுத்தணுமோ அப்படி அவமானப்படுத்திட்டேன்னு சொல்கிறான்.

அதாவது அவளது கர்ப்பத்தை காரணம் காட்டி ஊருக்கு முன்னாடி அழகப்பனையும், ஆனந்தியையும் அசிங்கப்படுத்தி விட்டதைப் பெருமையாகச் சொல்கிறான். இது மித்ராவுக்கோ ஆத்திரத்தைத் தருகிறது. அவளது தோழிகளிடம் சொல்ல டயானாவோ இப்பவே ஆனந்தியைக் குட்டை வெளிப்படுத்துகிறேன் என ஜாலியாகச் சொல்கிறாள். அதனால் மித்ராவும் கடுப்பாகிறாள்.

அந்த நேரம் பார்த்து ஆனந்தி, வார்டன், கோகிலா, ரெஜினா, சௌந்தர்யா அனைவரும் ஆஸ்டலுக்கு வருகின்றனர். அவர்களைப் பார்த்ததும் என்ன ஆனந்தி உங்க அக்கா கல்யாணத்தை முடிச்ச கையோட வந்துட்டே. 2 நாள் இருந்து வருவேன்னு பார்த்தேன். கோகிலாவும் வந்துருக்குன்னு செக்யூரிட்டி சொல்கிறார்.

அதைக் கேட்ட டயானா கோகிலா கல்யாணம் முடிஞ்சிடுச்சி. இப்போ தங்கச்சி ஆனந்திக்கு சீவந்தம். எல்லாத்துக்கும் கல்யாணம் முடிஞ்சதும்தான் குழந்தை பிறக்கும். ஆனால் ஆனந்திக்குக் கல்யாணம் முடியாமலேயே கர்ப்பம் ஆகி குழந்தைக்குத் தயாராகிட்டாள்னு நக்கலாகச் சொல்ல மித்ரா அவளது கன்னத்தில் பளார்னு ஒண்ணு விடுகிறாள். என்ன ஒரு மனவேதனையில வந்துருக்கா ஆனந்தி. அவ சூழ்நிலையைப் புரிஞ்சிக்காமப் பேசுறீங்க? அவளுக்கு தன்னோட கர்ப்பத்துக்கு யார் காரணம்னு தெரியாமல் தவிக்கிறான்னு திட்டுகிறாள்.

அதைக் கேட்டு ஆனந்தியும், வார்டனும் ஆச்சரியப்படுகிறார்கள். ஏன்னா எப்பவுமே ஆனந்திக்கு ஆப்போசிட்டா தான் மித்ரா பேசுவாள். ஆனால் இப்போ சப்போர்ட்டா பேசுகிறாளேன்னு ஆச்சரியப்படுறாங்க. அன்புவும் துளசியோட என் கல்யாணம் வேணாம்னு சொல்கிறான். துளசியும் ஆனந்தியின் கர்ப்பத்தால் அவளை வெறுத்து இனி மாமா அவளோட சேரக்கூடாதுன்னு தீர்க்கமாக முடிவு எடுக்கிறாள். ஆனந்தி தனது கர்ப்பத்துக்குக் காரணமானவனைக் கண்டுபிடித்தாளா?


அன்பு யாரைக் கல்யாணம் கட்டுவான்? ஆனந்திக்கு எதுக்கு சப்போர்ட் பண்ணினன்னு வார்டன் மித்ராவிடம் கேட்கிறாள். அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்குனதே நான்தான்னு மனதுக்குள் தவிக்கிறாள். இனி உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவன் யாருன்னு கண்டுபிடிச்சி வெளி உலகத்துக்கு நிரூபிக்கப் போற சிங்கப்பெண் நீ என வார்டன் ஆனந்திக்கு உரு ஏற்றுகிறாள். இனி அடுத்து நடப்பது என்னன்னு நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.