மணிப்பூர் மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்தும் தீர்மானத்துக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூரில், கடந்த பிப்ரவரி முதல் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் அதனை ஆகஸ்ட் 13 முதல் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் முன் வைக்கப்பட்டது.
பீகாரில் நடைபெறும் தேர்தல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் சூழலில், மணிப்பூர் குறித்த தீர்மானம் கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று ஆகஸ்ட் 5ம் தேதி அந்தத் தீர்மானம் மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பிகளின் தொடர் கேள்விகளுக்கும், கோஷங்களுக்கும் இடையில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மணிப்பூரில் இரு சமூகத்துக்கு இடையிலான மோதலானது நீதிமன்றத்தின் தீர்ப்பினால் உருவானது எனக் கூறியுள்ளார். இது குறித்து அவர் "மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையிலான மோதலானது, இடஒதுக்கீடு குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து உருவானது. இதனை, சிலர் மதக்கலவரம் எனக் கூறுவது தவறு" என பேசியுள்ளார்.
மேலும், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டதாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது முதல் ஒரேயொரு வன்முறைச் சம்பவம் மட்டுமே நடைபெற்றதாகவும் கூறியுள்ளார். முன்னதாக, மணிப்பூரின் முன்னாள் முதல்வர் பிரேன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?