Kingdom: "முற்றிலும் கற்பனையே" - இலங்கைத் தமிழர்கள் சித்தரிப்பு சர்ச்சை; வருத்தம் தெரிவித்த படக்குழு
Vikatan August 07, 2025 12:48 AM

'ஜெர்சி' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிற தெலுங்குத் திரைப்படம் 'கிங்டம்'.

விஜய் தேவரகொண்டா, பாக்யஶ்ரீ போஸ் உட்படப் பலரும் நடித்திருக்கும் இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது.

இத்திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களைத் தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகப் படத்திற்கு அரசியல் கட்சியினர் தொடங்கி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சீமான்

நா.த.க-வின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர், "அண்மையில் வெளியான ‘கிங்டம்’ திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களைக் குற்றப்பரம்பரை போல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்கள் என ‘கிங்டம்’ திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத் திரிபாகும். இது மிகப் பெரும் மோசடி" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Kingdom: ``எனக்காக கேரவன் கதவுகள் திறக்கப்பட்டன!'' - வைரலாகும் `கிங்டம்' பட நடிகரின் பேச்சு!

தற்போது, 'கிங்டம்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், படத்திற்கு வரும் எதிர்ப்புகளுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், "எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'கிங்டம்'. இப்படத்தின் சில காட்சியமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாகக் கேள்விப்பட்டோம்.

Kingdom Movie

தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது எனப் படத்தின் மறுப்புப் பகுதியில் (disclaimer portion) குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம்.

இதையும் மீறி, மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். 'கிங்டம்' திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்படி இருக்கு கிங்டம்?

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.