அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்று மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "அரசு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைவர்களில் எத்தனைப் பேர் பட்டியல் சாதி, பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் என்ற கேள்வியை (எண். 2469/04.08.2025) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரிடம் எழுப்பி இருந்தேன். அதற்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரி அளித்துள்ள பதில் பேரதிர்ச்சியைத் தருகிறது.
பிரதிநிதித்துவம் பாதாளத்தில்
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மொத்தமுள்ள 9 தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்களில் ஒருவர் கூட பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் இல்லை. பழங்குடியினர் இல்லை. பெண்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் இயக்குநரவை குறித்துத் தரப்பட்டுள்ள விவரங்களும் இப்படித்தான் உள்ளன. மொத்தமுள்ள 98 இயக்குநர்களில் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள் 6 பேர். பழங்குடியினர், சிறுபான்மையினர் தலா ஒருவர். பெண்கள் எண்ணிக்கை 12 பேர். மக்கள் தொகை சதவீதத்திற்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்தான்.
``இந்தியாவில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் மதுரைக்கு கடைசி இடம்..'' - சு.வெங்கடேசன் வேதனைஅரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
எல்.ஐ.சியின் இயக்குநரவையில் மொத்தமுள்ள 13 பேரில் பட்டியல் சாதியினர், சிறுபான்மையினர் எவருமே இல்லை. ஒரே ஒருவர் பழங்குடியினர். ஒரே ஒரு பெண். எல்.ஐ.சியின் தலைவர் பொறுப்பில் உள்ளவரும் மேற்கண்ட பிரிவினைச் சேர்ந்தவர் இல்லை.
அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இயக்குநரவையில் மொத்தமுள்ள 48 பேரில் பட்டியல் சாதியினர் 5 பேர் மட்டுமே. சிறுபான்மையினர் இல்லை. பழங்குடியினர் இல்லை. 18 பேர் பெண்கள்.
அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் 6 பேரில் பட்டியல் சாதியினர் ஒருவர். சிறுபான்மையினர் இல்லை. பழங்குடியினர் இல்லை. 3 பேர் பெண்கள்.
சாதிய பாரபட்சம்
அமைச்சரின் பதில் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. சாதிப் பாகுபாடுகளின் வெளிப்பாடே. இட ஒதுக்கீடு இல்லாத பதவிகளில் எந்த அளவுக்குப் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது சாட்சியம். அரசு நிறுவனங்களின் கதியே இதுவென்றால் தனியார் நிறுவனங்களில் எல்லாம் என்ன நிலைமை இருக்கும்" என்று சு.வெங்கடேசன் எம்பி கருத்து தெரிவித்திருக்கிறார்.
Agaram: "உலகத்துல சவாலானது நல்லது செய்றது; யாருக்காக வேண்டும் என்பதில் சூர்யா... " - சு.வெங்கடேசன் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk