உயர்கல்வி வடிகாட்டி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற வழிகாட்டி ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் 2025-26ம் கல்வியாண்டில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை EMIS இணையதளத்தில் தங்களுடைய பெயரினைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாவட்ட அளவில் நடைபெற்ற பயிற்சிக்கான மதிப்பீடு தேர்வு (Assessment) EMIS இணையதளத்தில் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்பு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஆக.26-28 வரை நடைபெறும்.
எனவே, உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் தங்களுடைய பெயரினை EMIS இணையதளத்தில் 20.08.2025 மற்றும் 21.08.2025 ஆகிய தேதிகளில் கட்டாயம் பதிவு செய்யவும். EMIS இணையதளத்தில் தங்களை உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக பதிவு செய்த பின், இப்பயிற்சியில் பங்குபெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் அனைவரும் இந்த மதிப்பீட்டுத் தேர்வினை தவறாது மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத ஆசிரியர்களால பயிற்சிக்கான மதிப்பீட்டுத் தேர்வினை மேற்கொள்ள இயலாது.
ஆகையால், EMIS இணையதளத்தில் தங்களை உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக பதிவு செய்தபின், இப்பயிற்சியில் பங்குபெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் அனைவரும் இந்த மதிப்பீட்டுத்தேர்வினை தவறாது மேற்கொள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-