சூப்பர்! வசூலில் பட்டையை கிளப்பி வரும் தலைவன் தலைவி திரைப்படம்...!
Seithipunal Tamil August 07, 2025 02:48 AM

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள், 'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர்.

இவர் தற்போது விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கி,அப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் கதைக்கரு,"கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது".

இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை 'நித்யா மேனன்', நடிகர் 'யோகி பாபு' உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தூள் கிளப்பியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 25-ந்தேதி வெளியான 'தலைவன் தலைவி' படம் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும், படம் வெளியான 13 நாட்களில் உலக அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் குவித்துவருகிறது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.