கடந்த 2004 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் சுனாமி வந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு தெருவில் கடல் நீர் வெள்ளம் போல் சென்று கொண்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த காவல் அதிகாரி ஒருவர் அங்கு நிற்கும் மக்களை எல்லாம் அங்கிருந்து செல்ல சொல்கிறார். அதன் பின் சிறிது நேரத்தில் வெள்ளம் அதிகரித்து நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
View this post on Instagram
இதனை அங்கிருந்த வீட்டில் மாடியில் நின்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அப்போது அவர் அறிவிப்பு வரும் போதே கேட்டிருக்கலாம். இப்போது இந்த தண்ணீர் வற்றினால் தான் நாம் செல்ல முடியும் என்று கூறுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.