கனடா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில், கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்..!
Seithipunal Tamil August 08, 2025 08:48 AM

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற்றுள்ளனர்.  இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி, சீனாவின் ஜாங் ஷுய்-அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடி உடன் மோதினர்.

இதில் முதல் செட்டை 06-04 என கோகோ காப் ஜோடி வென்றது. ஆனால், அடுத்த 02-வது செட்டை 06-01 கோகோ காப் ஜோடி என இழந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட கோகோ காப் ஜோடி 03-வது செட்டை 13-11 என போராடி வீழ்த்தினர். இதன் மூலம் அமெரிக்காவின் கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி, சாம்பியன் பட்டத்தைக் கைபற்றி அசத்தியுள்ளது.

ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கோகோ காப் தோல்வி அடைந்தாலும்,  இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.