தமிழகத்தின் புதிய பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்றதும் அவர் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால பணித் திட்டங்கள் குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனையில், பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.