ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பனஸ்வாரா பகுதியில் ஒரு 16 வயது சிறுமியை சிறுவர்கள் இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மாதம் 20ஆம் தேதி அந்த சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவிற்கு காத்திருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு சிறுவர்கள் சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளனர். ஒரு சிறுவன் முன்னாள் வகுப்பு தோழன்.
அந்த சிறுமி அவர்களுடன் செல்ல மறுத்த நிலையில் வலுக்கட்டாயமாக அடித்து பைக்கில் ஏற்றி அத்தை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த சிறுமியை அவர்கள் ஒரு நாள் முழுவதும் வைத்து மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் மறுநாள் அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி சாலையோரம் வீசி சென்றனர்.
அந்த சிறுவர்கள் பலாத்காரம் செய்ததோடு அந்தரங்க உறுப்பில் ஒரு கண்ணாடி பாட்டிலை சொருகி நடுரோட்டில் வீசி சென்றனர். அந்த சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற ஒருவர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து குடும்பத்தினர் மற்றும் போலீசருக்கு தகவல் கொடுத்தார். அந்த சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அந்த சிறுமியின் நிலைமை சீராக உள்ள நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீசிடமும் குடும்பத்தினரிடமும் கூறியுள்ளார். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்த நிலையில் மற்றொருவரை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.