திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் சிறுவர்களிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக முதியவர்கள் உட்பட 4 பேர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 3 சிறுவர்களை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேரன்மகாதேவியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வது தொடர்பாக சிறுவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தங்களிடம் மோதலில் ஈடுபட்ட சிறுவனை தாக்குவதற்காக 3 சிறுவர்கள் அவனது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுவன் வீட்டில் இல்லாததால் அவனது தம்பியை மறைத்து வைத்திருந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அந்த சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான்.
அப்போது அந்த வழியாகச் சென்ற சரவணன்(60) மற்றும் ஆறுமுகம்(58) ஆகியோர் மோதலை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் சரவணன் மற்றும் ஆறுமுகத்தையும் வெட்டியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலை தடுக்க வந்த சரவணனின் 16 வயது மகனுக்கும் வெட்டு விழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தலைநகரில் பயங்கரம்... ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை.!! காவல்துறை விசாரணை.!!
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேரன்மகாதேவி காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சிறுவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "நீயெல்லாம் அப்பனா..." 2 வயது குழந்தை படுகொலை.!! அடித்தே கொன்ற தந்தை.!!