திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளி பலியான விவகாரத்தில், வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், உடலை சொந்த ஊர் கொண்டு செல்லும் செலவை ஏற்றுக் கொள்ளவதாகவும் தனியாருக்கு சொந்தமான ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் நேற்று நள்ளிரவு தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும் போது தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சடலத்தை மீட்ட காட்டூர் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி 1,000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமாதான பேச்சுவார்த்தை நடத்த சென்ற போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய நிலையில், காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் தொழிலாளர்களை விரட்டி அடித்தனர்.
இந்நிலையில், சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் உடலை சொந்த ஊர் கொண்டு செல்லும் செலவை ஏற்றுக்கொள்ளவதாகவும் ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?