Breaking: அமெரிக்காவிற்கு முதல் பதிலடி..! இனி பெப்சி, கோக், KFC விற்பனை கிடையாது… ஸ்விகி, சொமேட்டோவுக்கும் NO… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!
SeithiSolai Tamil September 04, 2025 01:48 AM

அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளதால் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக வெங்கடசுப்பு அறிவித்துள்ளார். இதுகுறித்து வெங்கடசுப்பு செய்தியாளர்களிடம் கூறும்போது, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது. எனவே அமெரிக்க பொருட்கள் ஆன பெப்சி, கோக் மற்றும் கேஎஃப்சி போன்ற பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

அதேபோன்று அமெரிக்க மினரல் வாட்டர் பாட்டில்களையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இந்தியாவிலேயே இதுபோன்ற பொருட்கள் தரமானதாக தயாரிக்கப்படுகிறது என்று கூறினார். மேலும் அமெரிக்காவில் இருந்து 50 சதவீத வரியால் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.

மேலும் அமெரிக்க நிறுவனங்களை புறக்கணித்துவிட்டு இந்திய நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் போவதாகவும் ஸ்வகி மற்றும் சொமேட்டோ போன்ற நிறுவனங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறி அவர் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு வேறொரு பிரிவில் பணிபுரிய வாய்ப்பளிக்கப்படும் என்றார். அதாவது தமிழ்நாட்டில் உணவு டெலிவரிக்காக சாரோ என்ற செயலியை விரைவில் அறிமுக படுத்த இருப்பதாக கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.