Madharasi: நாளை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மதராஸி படம் திரைக்கு வரவிருக்கின்றது. முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு ஆக்ஷன் பின்னணியில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் மதராஸி. ரொம்ப நாளைக்கு பிறகு முருகதாஸ் இயக்கும் தமிழ் படம் என்பதால் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தீனா, துப்பாக்கி, ரமணா என மாஸ் ஹிட் கொடுத்த முருகதாஸ் ரஜினிக்கு தர்பார், மகேஷ்பாபுவுக்கு ஸ்பைடர், சல்மான்கானுக்கு சிக்கந்தர் என மிகப்பெரிய தோல்விப்படங்களை கொடுத்ததால் முருகதாஸ் மீது ஒரு பெரும் அதிர்ப்தியும் இருக்கிறது. பாலிவுட்டில் இவரை சல்மான்கானின் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து தோல்விப்படங்களையே கொடுத்து வந்த முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் திடீர் கூட்டணி என்றதும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது.
அதனாலேயே மதராஸி படத்தின் மீது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தன. ஆனால் டிரெய்லர் வெளியாகி கம்பேக் கொடுத்தார் முருகதாஸ் என ஆஹோ ஓஹோனு பாராட்டி வருகிறார்கள்.அனைவரும் அடுத்த துப்பாக்கி படம் என்றே கூறி வருகிறார்கள். இந்த நிலையில் முருகதாஸ் படத்தை பற்றி புரோமோஷன் செய்து வருகிறார். பல பேட்டிகளில் படத்தை பற்றி பேசி வருகிறார்.
அதாவது இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் நடிக்கிறார். இவர் ஏற்கனவே துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தவர். அதை போல சூர்யாவின் அஞ்சான் படத்திலும் சூர்யாவுக்கு நண்பனாக நடித்தார். ஆனால் இப்போது வித்யூத் ஹீரோவாக நடித்து வருகிறாராம். ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறாராம். தென்னிந்திய நடிகர்கள் பல பேர் இவரை வில்லனாக நடிக்க அழைத்திருக்கிறார்கள்.
ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். மதராஸி படத்தில் வில்லனாக நடிக்க முருகதாஸுக்காகத்தான் சம்மதித்தாராம். மதராஸி படத்தில் இவர்தான் வில்லனாக நடிக்கணும்னு முருகதாஸ் ஆசைப்பட காரணம் துப்பாக்கி அட்ராக்ஷன் நிச்சயமாக இருக்க வேண்டும் என முருகதாஸ் நினைத்தாராம். முருகதாஸ் இந்த மாதிரி மதராஸி படத்தை பற்றி பேசும் போது துப்பாக்கி ரெஃபரன்ஸ் இருக்கிற மாதிரியே தான் பேசி வருகிறார்.
ஆனால் இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன். நான் நடித்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருக்கிறார். ஆனால் முருகதாஸ் சொல்வதை பார்க்கும் போது துப்பாக்கி படத்தை மனதில் வைத்தேதான் மதராஸி படத்தை எடுத்திருக்கிறார் என தோன்றுகிறது.