பிஸ்தா பர்பி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பிஸ்தா பருப்பு - 1 கப்
சர்க்கரை - 3 கப்
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை நன்கு வதக்கி ஆற வைத்துப் மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.பிறகு, சர்க்கரையை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.பிறகு ஒரு தட்டை எடுத்துக் கொண்டு, அதில் நெய்யை தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரை பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும். ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து தேவையான அளவு நெய்யை விட்டுக் கிளறவும்.பிறகு, நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி சமமாய்ப் பரப்பவும்.சிறிது நேரம் கழித்து சூடாறியதும் உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொண்டால் சுவையான பிஸ்தா பர்பி தயார்.