தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொன்னேரி யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நாளை அதாவது செப்டம்பர் 7 அன்று கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 11 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த பராமரிப்பு பணிகள் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நடைபெறும்.
நாளை ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரங்கள்:
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி (EMU) ரயில்கள்: 42609 (மாலை 6:45), 42611 (இரவு 8:00), 42613 (இரவு 9:20), 42610 (இரவு 9:35), 42640 (இரவு 9:25)
மூர் மார்க்கெட் வளாகம் - கும்மிடிப்பூண்டி (EMU) ரயில்கள்: 42029 (இரவு 7:35), 42037 (இரவு 11:20)
கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட் வளாகம் (EMU) ரயில்கள்: 42038 (இரவு 8:15), 42042 (இரவு 10:30)
சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் வளாகம் (EMU) ரயில்: 42422 (இரவு 8:35)
கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை (EMU) ரயில்: 42608 (இரவு 7:35)
ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் மீஞ்சூர் இடையே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - மீஞ்சூர் சிறப்பு ரயில்கள்:
பயணிகள் சிறப்பு ரயில் 01: சென்னை கடற்கரை - மீஞ்சூர் (மாலை 6:45)
பயணிகள் சிறப்பு ரயில் 02: மூர் மார்க்கெட் வளாகம் - மீஞ்சூர் (மாலை 7:35)
பயணிகள் சிறப்பு ரயில் 05: சென்னை கடற்கரை - மீஞ்சூர் (இரவு 9:20)
பயணிகள் சிறப்பு ரயில் 06: மூர் மார்க்கெட் வளாகம் - மீஞ்சூர் (இரவு 11:20)
பயணிகள் சிறப்பு ரயில் 08: மூர் மார்க்கெட் வளாகம் - மீஞ்சூர் (இரவு 9:35)
மீஞ்சூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள்:
பயணிகள் சிறப்பு ரயில் 04: மீஞ்சூர் - சென்னை கடற்கரை (இரவு 8:04)
பயணிகள் சிறப்பு ரயில் 06: மீஞ்சூர் - மூர் மார்க்கெட் வளாகம் (இரவு 8:20)
இந்த மாற்றங்கள் குறித்த முழு விவரங்களையும், தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ரயில்வே நிலையங்களில் தெரிந்து கொள்ளலாம்.
Edited by Mahendran